ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை 3 ஆயிரம் உக்ரேனிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும் 10 ஆயிரம் பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதேவேளை நாட்டில் ரஷ்ய அணுசக்தி தாக்குதலின் அச்சுறுத்தலைப் பற்றியும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
ஒரு மாதத்திற்கு முன்னர் சுமார் 1,300 உக்ரேனிய துருப்புக்கள் இறந்ததாகவும் அதிகமான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
இருப்பினும் பொதுமக்களை உள்ளடக்காத இந்த புள்ளிவிவரங்களை சரிபார்க்க முடியவில்லை என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.