ரஷ்ய துருப்புக்களால் உக்ரைனின் போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு ஏற்பட்ட சேதம் மனிதாபிமான உதவிகளை வழங்கும் செயற்பாடுகளுக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய துருப்புக்கள் வடக்கு பிராந்தியத்தில் இருந்து வெளியேறியபோது பாலங்களை குண்டுகள் வைத்து அழித்ததாகவும், கண்ணிவெடிகளை புதைத்தாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக 285,000 மக்கள் வசிக்கும் நகரத்தில் காணப்படும் ஒரேயொரு ஆற்றின் குறுக்குவழி பாலத்தையும் ரஷ்ய துருப்புக்கள் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வடக்கின் பல பகுதிகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குபவர்கள் குறிப்பிடத்தக்க சவாலை எதிர்கொண்டுள்ளதாக பிரித்தனியா பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.