நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆசியக் கிண்ண போட்டி 2022 இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.
போட்டியை இலங்கையில் நடத்துவது என முன்னதாக முடிவு செய்யப்பட்டபோதும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் போட்டி இங்கு நடைபெறுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 2022 ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இலங்கையில் நடத்த முடியுமா என்பதை உறுதிப்படுத்த ஜூலை 27 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஆசியக் கிண்ண போட்டியை நடத்துவது குறித்து இலங்கை தெளிவான முடிவை எடுக்கத் தவறினால், போட்டியை வேறு இடத்திற்கு மாற்றலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.





















