பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், நிதியமைச்சர் ரிஷி சுனக் உள்ளிட்ட 13 பேருக்கு ரஷ்யா பயணத் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உக்ரைன் விவகாரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ரஷ்யாவுக்கு எதிரான செயல்களை செய்து வரும் 13 பிரித்தானிய அரசியல் தலைவர்கள் ரஷ்யா வருவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.
பிரதமர் பொரிஸ் ஜோன்சன், நிதியமைச்சர் ரிஷி சுனக், உட்துறை அமைச்சர் பிரீத்தி படேல், அட்டர்னி ஜெனரல் சுயெல்லா பிராவேர்மன், துணை பிரதமர் டொமினிக் ராப், வெளியுறவுத் துறை இணையமைச்சர் லிஸ் டிரஸ் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
விரைவில் மேலும் சில அரசியல்வாதிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.