கடந்த மார்ச் மாத இறுதியில் நிதி மையம் முடக்கப்பட்டதிலிருந்து, முதல் முறையாக ஷங்காயில் கொவிட் தொற்று நோயால் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் 89 மற்றும் 91 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், தடுப்பூசி போடப்படாதவர்கள் என்றும் நகர சுகாதார ஆணையத்தின் வெளியீடு தெரிவித்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட குடியிருப்பாளர்களில் 38 சதவீதத்தினர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாக ஷங்காய் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகரம் இப்போது மற்றொரு சுற்று வெகுஜன சோதனைக்குள் நுழைய உள்ளது. அதாவது பெரும்பாலான குடியிருப்பாளர்களுக்கு நான்காவது வாரத்தில் கடுமையான முடக்கநிலை கட்டுப்பாடுகள் தொடரும்.
கிழக்கு வணிக மையம் திங்களன்று 22,248 புதிய உள்நாட்டு கொவிட் தொற்றுகளை பதிவு செய்துள்ளது என்று நகராட்சி சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
மற்ற உலகளாவிய தொற்றுகளுடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், புள்ளிவிபரங்கள் சமீபத்திய வாரங்களில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
நகரத்தில் பல்லாயிரக்கணக்கான கொவிட் தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, அவற்றில் பெரும்பாலானவை அறிகுறியற்றவை.
சீனாவின் பணக்கார மற்றும் நிதி மையமான ஷாங்காயில் வசிப்பவர்கள் கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் உள்ளதால், பலர் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்வதாக, புகார் கூறுகின்றனர்.