எரிபொருள் விலையேற்றம் காரணமாக நாட்டின் பல்வேறு இடங்களில் தனியார் பேருந்து சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
இதனால் பல பிரதேசங்களில் தனியார் பேருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பல பேருந்துகள் சேவையில் இருந்து விலகியுள்ளதாக பேருந்து தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று காலை பாடசாலை மற்றும் அலுவலகங்களுக்கும் இதர தேவைகளுக்கும் செல்லும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையினை நேற்று முன்தினம் அதிகரித்திருந்த நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையினை நேற்று அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் என்பன அடிப்படையில் குறைந்த பேருந்து கட்டணம் 40 ரூபாவரை அதிகரிக்கக்கூடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.