எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப முச்சக்கர வண்டி வாடகை கட்டணத்தை அதிகரிக்க முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 80 ரூபாயாகவும் மேலதிகமாக செல்லும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 70 ரூபாயும் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வரிசையில் நின்று எரிபொருளைப் பெறுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு விலை அதிகரித்துள்ளது.
அதிகரித்து வரும் செலவீனங்களுடன் ஒப்பிடுகையில் பொதுமக்களுக்கு நியாயமான முறையிலேயே முச்சக்கர வண்டி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.