நேற்றிரவு இரவு முதல் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலை வேன் கட்டணத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலை வேன் நடத்துநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டீசல் இல்லாததால் சேவையை தொடர்வதில் பல சிரமங்களை எதிர்கொள்வதாகவும் குறிப்பாக எரிபொருள் நிரப்ப நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்தமுறை எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டபோது பாடசாலை வேன் கட்டணத்தை அதிகரிக்காமல் இருக்க தீர்மானம் எட்டப்பட்டது.
ஆனால் தற்போது எதிர்நோக்கும் பல பிரச்சினைகளை கருத்திற்கொண்டு கட்டணங்களை அதிகரிப்பதைத் தவிர வேறு வழி தமக்கில்லை என பாடசாலை வேன் நடத்துநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.