இலங்கையில் தற்போது நிலவும் உணவு நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஐந்து சக்திவாய்ந்த வெளிநாடுகளுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதன்படி, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் முன்னாள் பிரதமர் கலந்துரையாடியுள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்காலத்தில் இலங்கை கடுமையான உணவு நெருக்கடியை சந்திக்கும் என முன்னாள் பிரதமரிடம் தெரிவித்த குறித்த நாடுகள், இலங்கைக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளன.
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணக்கம் காணும் பட்சத்தில் இலங்கைக்கு உதவுவது இலகுவாகும் எனவும் மேற்கண்ட நாடுகளின் பிரதிநிதிகள் முன்னாள் பிரதமரிடம் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.