ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லியென் ஏப்ரல் மாதம் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் இந்தியா வருகைத்தரவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு வருகை தரும் அவர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஐரோப்பிய ஆணைய தலைவரின் இந்திய வருகை முக்கியதுவம் மிக்க விடயமாக பார்க்கப்படுகிறது.