சஜித் பிரேமதாசவினால் சபையில் முன்வைக்கப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறைமையை நீக்குவதற்கான யோசனையை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வது குறித்து ஜனாதிபதியும் கலந்துரையாடி வருவதாகவும் நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு முன்னைய அரசாங்கங்களும் ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகார முறைமையை நீக்குவதாக தெரிவித்திருந்தாலும் அது நடைமுறைக்கு வரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.