கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் முதல் முதலாக கொரோனா எக்ஸ் இ தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரது இரத்த மாதிரிகளை சேகரித்து ராஜீவ் காந்தி பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கேரளாவில் கொரோனா எக்ஸ் இ பரவலை கட்டுப்படுத்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.