ரஷ்ய இராணுவ ஜெனரல்கள் மற்றும் ரஷ்ய ஆயுதப்படைகளுக்கு ஆதரவளிக்கும் 26 தனிநபர்கள் மற்றும் வணிகங்களை குறிவைத்து பிரித்தானியா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இராணுவத் தலைவர்கள், பாதுகாப்பு நிறுவனங்களை குறிவைத்து விதிக்கப்பட்ட இந்த புதிய தடைகள், ரஷ்ய இராணுவத்தை ஆதரிப்பவர்களுக்கும் பொருந்தும்
இந்த தடையின் மூலம், ரஷ்ய பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் இகோர் கோனஷென்கோவ், விமானப்படையினர் கமாண்டர் ஆன்ரி செர்டிகோவ், இராணுவ நிபுணர் இகோர் கோரோட்சென்கோ, ரஷ்ய ரயில்வே தலைமைச் செயல் அதிகாரி ஓலெக் பெலோஸ்ரோவ் உள்ளிட்டோரின் சொத்துகள் மற்றும் அவர்கள் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல காலநிஷிகோவ் ரொக்கெட் ஸ்பேஸ் சென்டர் உள்ளிட்ட நிறுவனங்களின் மீதும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு மேற்குலகின் பிரதிபலிப்பில் முக்கிய பங்கு வகிக்க, ஏற்கனவே நூற்றுக்கணக்கான பொருளாதாரத் தடைகளை பிரித்தானியா விதித்துள்ளது இதில் புடின் உட்பட அரசியல்வாதிகள் மீதான சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகள் அடங்கும்.
சமீபத்திய பொருளாதாரத் தடைகள், ‘புச்சா படுகொலையில்’ ஈடுபட்டதாக பிரித்தானிய அரசாங்கம் கூறியுள்ளது.
வடக்கு நகரம் ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த பல வாரங்களில் புச்சாவில் ரஷ்யா போர்க்குற்றங்கள் செய்ததாக உக்ரைனும் பெரும்பாலான முக்கிய மேற்கத்திய நாடுகளும் குற்றம் சாட்டின. இது ஒரு சர்வதேச சலசலப்பைத் தூண்டியது மற்றும் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் ரஷ்யா மீது மேலும் பொருளாதாரத் தடைகளுக்கு வழிவகுத்தது. ஆனால், புச்சாவில் சிவிலியன்களைக் கொன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.
கடந்த மார்ச் 10ஆம் திகதி முதல் உக்ரைனிய அரசாங்க கட்டடங்கள், பாடசாலைகள்; மற்றும் மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட ரஷ்ய தாக்குதல்கள், வேண்டுமென்றே நடத்தப்பட்டவை என்று பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகம் கூறியுள்ளது.