மின் கட்டணத்தை அதிகரிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நுகர்வுக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.
இந்த நிலையில், இன்று டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர், மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட கட்டணத் திருத்தங்களுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது இது முதல் தடவை அல்ல என தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டிலிருந்து பல தடவைகள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த கோரிக்கையை நடைமுறைப்படுத்தவோ, திருத்தவோ அல்லது நிராகரிக்கவோ அமைச்சரவைக்கு அதிகாரம் உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
The proposed tariff revisions by CEB has been approved by PUSL and not for the first time. The requests has been made multiple times since 2015. The cabinet has the authority to implement it, revise it or to reject the proposal. No decision has been made on the request so far.
— Kanchana Wijesekera (@kanchana_wij) April 26, 2022