இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், ஜார்கண்ட் மாநிலத்தில் பாடசாலைகளுக்கு வழிக்காட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி இறை வணக்க கூட்டம், கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ஹரியானா மாநிலத்தில் 18 வயது முதல் 59 வயது வரையிலான அனைவருக்கும் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் எனவும், அரசு மருத்துவமனை அல்லது மருந்தகங்களில் 250 ரூபாய் மதிப்புள்ள பூஸ்டர் டோஸை இலவசமாக பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மேலும் 3 தடுப்பூசிகளை அவசர கால அடிப்படையில் சிறார்களுக்கு செலுத்த இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.