ஆயுஷ்மன் மருத்துவ காப்பீடு திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே 50 கோடி பேர் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், இதனை மேலும் விரிவுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 5 இலட்சம் ரூபாய் வரை இலவச காப்பீடு வழங்கப்படுகிறது.
பொருளாதாரச் சூழலால் மருத்துவ பாதுகாப்பை தவற விடும் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு இத்திட்டம் பெரும் பயன் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.