ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள குறிப்பில், ”இந்தியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் 4 கோடி பரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது.
அதேநேரம் இந்தியாவிற்கு தினமும் 50 இலட்சம் பரல் கச்சா எண்ணெய் தேவையில் அதில், 85 சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.
தற்போது வரை ஐஓசி, எச்பிசிஎல், பிபிசிஎல் நிறுவனங்களை விட காட்டிலும் ரிலையன்ஸ் அதிகமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இந்த நிறுவனம் ஜூன் காலாண்டு வரை தேவைக்காக 1.5 கோடி பரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.