பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கம் தீர்வுகாண வேண்டும் என்று மாத்திரமே பொதுமக்கள் எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
மாறாக இத்தருணத்தில் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை மக்கள் எதிர்பார்க்கவில்லை என அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
மக்களுக்கு எரிவாயு, எரிபொருள், உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் சீராக வழங்கப்படாத நிலையில் தற்போதும் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் அரசியலமைப்பின் 19, 20 அல்லது 21 வது திருத்தத்தை மக்கள் விரும்பவில்லை என வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டினார்.
மேலும் கடந்த அரசாங்கத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலையை ரணில் விக்கிரமசிங்க உறுதி செய்திருந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை பொதுமக்கள் போராட்டத்தில் சில அரசியல் கட்சிகள் தங்கள் தனிப்பட்ட நலன்களை அடைய முயற்சிப்பதற்காக வஜிர அபேவர்தன கடுமையாக சாடினார்.