எதிர்வரும் 03ஆம் திகதி பாரிய ஊழல்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களை ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அம்பலப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது இலங்கை அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்துமெனவும், முக்கிய சில அரசியல் பிரமுகர்களின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வருமெனவும் சமூக ஊடகங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
“சம்பந்தப்பட்டவர்களும், கேட்டவர்களும் மே 3 ஆம் திகதி விழிப்பாக இருக்கவும்.‘ என தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அநுர பதிவிட்டுள்ளார். இப்பதிவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“ஊழல்களையே“ அநுர உரிய ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துவாரென வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.















