இலங்கையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கையை முன் கொண்டு செல்வதற்காக 11 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே ஜனாதிபதியுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாட்டின்படி, ஏனைய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்ஷன யாப்பா, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, டிரான் அலஸ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.