ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச கூட்டணியை உருவாக்கும் முயற்சியாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி7 உச்சமாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜுன் மாதம் 26 ஆம் திகதி பவேரியன் ஆல்ப்ஸில் ஆரம்பமாகும் இந்த மாநாட்டில் இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா, செனகல் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இதில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளராக மோடியை அழைப்பது எனவும், ரஷ்யாவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்க ஜெர்மனி பிரதமர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.