இந்தியாவில் கல்வி நிறுவனங்கள் மீதான இணையவழி தாக்குதல்கள் அதிகம் நடந்துள்ளதாக ஆய்வொன்று தெரிவித்துள்ளது.
ஆசிய நாடான சிங்கப்பூரைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிர்வாக அமைப்பு ஒன்று, கல்வி நிறுவனங்கள் மீதான சைபர் தாக்குதல் தொடர்பாக சமீபத்தில் ஆய்வு நடத்தியது.
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ”கடந்த ஆண்டில் பதிவான இணைய வழி தாக்குதல்களில் இந்தியாவில் தான் மிகவும் அதிகமான இணையவழி தாக்குதல்கள் நடந்துள்ளன.
அமெரிக்கா, பிரித்தானியா, இந்தோனேஷியா, பிரேசில், ஆகிய நாடுகள் அதற்கு அடுத்த இடங்களில் உள்ளன. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் நடந்த தாக்குதல்களில் 58 சதவீதம் இந்திய நிறுவனங்கள் மீதே நடந்துள்ளன. அதற்கு அடுத்து இந்தோனேஷியாவில் 10 சதவீதம் நடந்துள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.