கொரோனா தடுப்பூசி போட்டதால் ஏற்பட்ட பாதகமான விளைவுகள் குறித்த தரவுகளை வெளியிடும்படி உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிப்பது அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
இதன்போது அரசின் தடுப்பூசிக் கொள்கை நியாயமற்றது இல்லை எனவும், தடுப்பூசி போடாதோர் பொது இடங்களுக்குச் செல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்கெனவே நீக்காவிட்டால் அவற்றைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் யாரையும் கட்டாயப்படுத்து தடுப்பூசி போட முடியாது எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.