சர்வக்கட்சி இடைக்கால அரசமைப்பதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணக்கம் தெரிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், அரசிலிருந்து வெளியேறி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(திங்கட்கிழமை) நடைபெற்றது.
ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமை தாங்கியிருந்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் அதன் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ், தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச, செயலாளர் சாகர காரியவசம் ஆகியோரும், சுயாதீன அணிகளின் சார்பில் நிமல் சிறிபாலடி சில்வா, அநுரபிரியதர்சன யாப்பா, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் டிரான் அலஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.
இதன்போதே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் சர்வக்கட்சி இடைக்கால அரசமைப்பதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.