கியூபாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக விசா வழங்கும் சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் நேற்று செவ்வாயன்று ஹவானாவில் உள்ள தூதரகத்திற்கு வெளியே ஒரு சிறிய மக்கள் கூட்டம் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமது பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மர்ம நோய்களால் பாதிக்கப்பட்டதை அடுத்து, 2017 ஆம் ஆண்டில் கியூபா தலைநகரில் உள்ள தனது தூதரக சேவைகளை அமெரிக்கா நிறுத்தியிருந்தது.
இதன் காரணமாக பொருளாதார நெருக்கடி காரணமாக அவதிப்படும் கியூபாவில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இருந்த பலருக்கும் இது பெரும் அடியாக இருந்தது.
இந்நிலையில் கடந்த மாத இறுதியில் கியூபாவுடன் அமெரிக்கா தனது உயர்மட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்தியதை அடுத்து தூதரகம் மீண்டும் சேவையை வழங்கிவருகின்றது.