பிரதி சபாநாயகர் பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்மொழியப்பட்டுள்ள ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு ஆதரவு வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.
பிரதி சபாநாயகராக செயற்பட்டிருந்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தனது பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவித்திருந்தார்.
ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும், இதற்கமைய, இன்றைய தினம் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றில் நேற்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

















