பிரதி சபாநாயகரை தெரிவுசெய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு தற்போது நாடாளுமன்றில் ஆரம்பமாகியுள்ளது.
கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பெயர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்மொழியப்பட்டதுடன், சுசில் பிரேமஜயந்தவினால் உறுதிப்படுத்தப்பட்டது.
அதேநேரம், பிரதி சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் பரிந்துரைக்கப்பட்டதுடன், லக்ஷ்மன் கிரியெல்லவினால் ஆதரவளிக்கப்பட்டது.
இதனையடுத்து, பிரதி சபாநாயகர் பதவிக்கு இரு வேட்புமனு தாக்கல் செய்தமையால் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என சபாநாயகர் தெரிவித்தமைக்கு அமைய தற்போது இரசகிய வாக்கெடுப்பு இடம்பெற்று வருகிறது.