பிரதமர் பொரிஸ் ஜோன்சன், ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா இன்று (வியாழக்கிழமை) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு சந்திப்பின் போது, இருதலைவர்களும் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு புதிய பாதுகாப்பு கூட்டாண்மைக்கு உடன்பட உள்ளனர்.
பரஸ்பர அணுகல் ஒப்பந்தம், பிரித்தானிய மற்றும் ஜப்பானியப் படைகளின் பயிற்சி, கூட்டுப் பயிற்சிகள் மற்றும் பேரிடர் நிவாரணங்களுக்காக ஒன்றாக ஈடுபடுதல் போன்ற விடயங்கள் குறித்தும் விவாதிக்கவுள்ளனர்.
இந்த ஒப்பந்தம் இந்தோ-பசிபிக் மீதான பிரித்தானியாவின் உறுதிப்பாட்டை அதிகரிக்கும் என்று டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. மேலும், ஐரோப்பிய நாட்டுடன் கையெழுத்திட்ட முதல் சந்தர்ப்பமாகும்.
இது கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அரசாங்கத்தின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை ஒருங்கிணைந்த மதிப்பாய்வைப் பின்பற்றுகிறது.
டவுனிங் ஸ்ட்ரீட் சந்திப்பின் மையங்களில் ஒன்று ரஷ்யா மீது அழுத்தம் கொடுப்பது மற்றும் அதன் எண்ணெய் மற்றும் எரிவாயுவை நம்பியிருக்கக் கூடிய நட்பு நாடுகளுக்கு எவ்வாறு உதவுவது என்பதில் இருக்கும்.
ஜி7 நாடுகளின் உறுப்பினரான ஜப்பான், உக்ரைனைப் பாதுகாக்கும் மேற்கத்திய கூட்டணியின் ஒரு பகுதியாகும். மேலும் படையெடுப்பைக் கண்டித்து, ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது மற்றும் உக்ரைனுக்கு இராணுவ உதவியை அனுப்பியுள்ளது.
இதன்போது, ஜப்பானுக்கான பிரித்தானியாவின் புதிய வர்த்தகத் தூதராக முன்னாள் வணிகச் செயலர் கிரெக் கிளார்க்கை பிரதமர் பொரிஸ் அறிவிப்பார்.
சந்திப்பின் போது இரு தலைவர்களும் ஃபுகுஷிமா பகுதியில் இருந்து ஜப்பானிய பாப்கார்ன் உட்பட சில உணவுகளை சாப்பிடுவார்கள். கடந்த 2011ஆம் ஆண்டு அணுசக்தி பேரழிவுக்குப் பிறகு ஜப்பானிய பிராந்தியத்தில் இருந்து உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்குவதைக் குறிக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைகின்றது.