நாடாளுமன்றத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் அவை சபாநாயகரால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாக செய்தி வந்ததும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேடையில் ஏறியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அத்தோடு, ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இனியும் தாமதிக்காமல் எடுத்துக்கொள்ளுமாறு எதிர்க்கட்சி சபாநாயகரிடம் வலியுறுத்தியது.
இதனையடுத்து 10 நிமிடங்களுக்கு நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் மீண்டும் அமர்வுகள் ஆரம்பமாகியிருந்த நிலையில், நாடாளுமன்றத்திற்கு வெளியே ஏற்பட்டுள்ள சூழிநிலையைக் கருத்திற்கொண்டு நாடாளுமன்ற அமர்வுகளை 17ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.