உக்ரைனில் ஒரு நீண்ட போருக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தயாராகி வருகிறார் என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
கிழக்கில் வெற்றி பெற்றாலும் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது.
உக்ரைனின் கிழக்கு பகுதியில் கடுமையான மோதல் நீடித்து வரும் அதேவேளை ரஷ்யாவும் தனது பகுதியை கைப்பற்ற முயற்சித்து வரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் அதன் தலைநகரான கீயூவைக் கைப்பற்றும் முயற்சிகளை எதிர்த்ததை அடுத்து, டான்பாஸ் பகுதியைக் கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் பணவீக்கம், உணவுப் பற்றாக்குறை மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரித்தால், உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு பலவீனமடையும் என்ற தவறான எண்ணத்தை ரஷ்ய ஜனாதிபதி கொண்டுள்ளதாகவும் அமெரிக்க உளவுத்துறை கூறியுள்ளது.