ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
இதனையடுத்தே, திட்டமிட்டபடி மே 17ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வுகள் கூட்டப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டியதன் அவசியத்தை கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியதையடுத்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட அனுமதியுடன் ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.