புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான எந்தவொரு அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு அழைப்பு மற்றும் நாட்டின் தற்போதைய நிலை குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடியதுடன், அதன் பின்னர் ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் இணைவதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.