ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானம், மக்களின் குரலுக்கு மதிப்பளிக்காமல் எடுக்கப்பட்ட தீர்மானம் என ஜே.வி.பி.யின் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அனைத்து குடிமக்களும் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஒருமனதாக அழைப்பு விடுத்தனர். அவர்கள் அனைவரும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், கொள்ளையடிக்கப்பட்ட பொது நிதியை மீட்டெடுக்கவும், அந்த செயல்களுக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் அழைப்பு விடுத்தனர் என அவர் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி.யின் தலைவர் இந்த முடிவை ஏளனம் செய்ததோடு, இந்த நியமனம் நியாயமற்றது என்றும் ஜனநாயக மதிப்பு இல்லை என்றும் கூறியுள்ளார்.