அமெரிக்காவின் நியூயோர்க் பிராந்தியத்தில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 18 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவரது பெயர் விபரங்கள் பொலிஸாரினால் வெளிப்படுத்தப்படவில்லை.
வர்த்தகம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் அங்கு நுழைந்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு அதனை நேரலையாக வெளியிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் எஃப்.பி.ஐ விசாரணைகளை ஆரம்பித்துள்ள அதேநேரம் துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இனவாத வெறிச் செயலாக இதனை கருதுவதாக அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.
தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.