பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், சட்டமா அதிபருக்கும் இடையில் இன்று(செவ்வாய்கிழமை) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
21ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இதன்போது பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
19ஆவது திருத்தச் சட்டம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் கொண்டுவந்த 20ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக இரத்துச் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், 19ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற வகையில் அரசியல் கட்சிகள், புத்திஜீவிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அதற்கான முயற்சிகளை அரசியல் கட்சிகள் முன்னெடுத்துள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.