சீரற்ற வானிலை காரணமாக சமையல் எரிவாயு தரையிறக்கும் பணிகளை முன்னெடுக்க முடியாமையாதுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
எனவே, மறு அறிவிப்பு வரும்வரை காத்திருக்கும்படியும் தேவையில்லாமல் எரிவாயுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் பொதுமக்களை அந்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போது வரையில் 7 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று முதல் சமையல் எரிவாயு விநியோகப் பணிகளை மீள ஆரம்பிப்பதாக லிட்ரோ நிறுவனம் நேற்று அறிவித்தது.
இதற்கமைய, நாட்டை வந்தடைந்த கப்பலில் இருந்து 2,800 மெட்ரிக் டன் எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் நேற்றிரவு ஆரம்பிக்கப்பட்டன.
எனினும் சீரற்ற வானிலை காரணமாக முழுமையாக தரையிறக்கும் பணிகள் தடைப்பட்டுள்ளன.