வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் உத்தியோகபூர்வமாக முள்ளிவாய்க்கால் படுகொலை ஈகைச் சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டது.
இன்று (புதன் கிழமை) (மே 18) காலை 7 மணிக்கு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் ஒன்று கூடிய பிரதேச சபை உறுப்பினர்கள் பணியாளர்கள் ஈகைச்சுடரேற்றி அஞ்சலித்தனர்.
இவ் அஞ்சலியைத் தொடர்ந்து தவிசாளர், மற்றும் சபையின் உறுப்பினர்கள் செல்வதிசைநாயகம் தவநாயகம் ஆகியோர் அஞ்சலியுரையாற்றினர்.
இவ் அஞ்சலியுரைகளில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பாரதூரமான மனித உரிமைகளுக்கு நீதி நிலைநாட்டப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச உள்ளுராட்சிக் கட்டமைப்பான பிரதேச சபை வருடாவருடம் உத்தியோகபூர்வமாக எந்த இடர்கள் ஏற்படுத்தப்படினும் நினைவேந்தும் உரிமையினை வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.