நீதியும் பொறுப்புக்கூறலும் இன்னும் மறுக்கப்படுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவ தினத்தை முன்னிட்டு ருவிட்டரில் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், “13 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உயிர்களையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் நினைவு கூர்கிறோம்.
நீதியும் பொறுப்புக்கூறலும் இன்னும் மறுக்கப்படுகின்றன. பொறுப்பாளர்கள் இன்னும் சுதந்திரமாகத் திரிகிறார்கள். எதிர்காலத்தில் மீண்டும் இவ்வாறு நடக்காமல் இருக்க நீதியை உறுதி செய்ய வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
Remembering the lives lost, and the families affected in #Mullivaikkal on the same day 13 years ago.
Justice and accountability are still denied, and those responsible still roam free. We must ensure justice to ensure non-recurrance in the future. pic.twitter.com/7g1kTwMVtz— Shanakiyan Rajaputhiran Rasamanickam (@ShanakiyanR) May 18, 2022