‘நவ சிங்ஹலே’ அமைப்பினுடைய தலைவர் டான் பிரியசாத் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு எதிரே நடைபெற்ற அமைதிப் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பாக சாட்சியங்கள் ஏதும் இருப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உட்பட 22 பேரை உடனடியாகக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் மிலன் ஜயதிலக, மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோ, சுயதொழில் செய்பவர்களின் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மஹிந்த கஹந்தகம மற்றும் ‘நவ சிங்ஹலே’ அமைப்பினுடைய தலைவர் டான் பிரியசாத் உள்ளிட்ட 22 பேரை கைது செய்யுமாரே உத்தரவிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.