அத்தியாவசியமற்ற அரச ஊழியர்களை நாளை (வெள்ளிக்கிழமை) பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.
எரிபொருளைச் சேமிப்பதற்காக அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் பொதுமக்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதனூடாக எரிபொருளை பாதுகாத்து இந்த வார இறுதியை சமாளித்துக்கொள்ள முடியுமென்றும் அதன்பின்னர் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.