முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் பேஜெட் வீதியின் இல்லத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி உயர் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுக்கு இங்கு அவர் வெளியேறியுள்ளார்.
இதனை அடுத்து கொழும்பு 7 இல் உள்ள அரசாங்கத்தின் இல்லத்தில் குடியேறியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேஜெட் வீதியில் உள்ள குடியிருப்பை விட்டு வெளியேற தனக்கு நான்கு வாரங்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி வருத்தம் தெரிவித்தார்.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தாக்கல் செய்த மனு விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் குறித்த வீடு 100 ஆண்டுகளுக்கும் மேலானது என்றும் தான் அங்கு குடியேறுவதற்கு முன்னர் பாழடைந்த மேற்கூரை உட்பட முழுமையான புதுப்பிப்பை மேற்கொண்டதாகவும் மைத்திரிபால சிறிசேன கூறினார்.
அத்தோடு 800 மில்லியன் செலவில் மூன்று வீடுகளில் இணைந்து ஒரு பாரிய தனி மாளிகையை கட்டுவதற்கு ஜனாதிபதியாக இருந்தபோது நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுவது தவறான செய்தி என்றும் தெரிவித்தார்.