மண்ணெண்ணெய் மாத்திரம் விநியோகம் செய்வதற்கான நிரப்பு நிலையங்களை உருவாக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதனூடாக, பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களுக்கு இலகுவாக மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து தற்போது திட்டமிடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுப்பர் டீசல் மற்றும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் என்பன, சந்தையில் நாளாந்த தேவையை விட 10 சதவீதம் குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வலுச்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.