அரசாங்கத்தில் சாராத கட்சிகள் முன்வைக்கும் திருத்தங்களுக்கு உரிய பெறுமதி வழங்கினால் 21வது திருத்தத்திற்கு அக்கட்சிகளின் ஆதரவு வழங்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் 9 சுயாதீனக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “21வது திருத்தத்தின் வரைவை ஆய்வு செய்து, எங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளோம். அதை ஆதரிக்கும் அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பரிசீலித்து இறுதி வரைவு தயாரிக்கப்படும் என்று பிரதமர் கூறினார்.
அவ்வாறு அரசாங்கத்தில் சாராத கட்சிகள் முன்வைக்கும் திருத்தங்களுக்கு உரிய பெறுமதி வழங்கினால் 21வது திருத்தத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.