உக்ரைன் தானிய ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தான் முட்டுக்கட்டை போட்டுள்ளது என ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.
ரஷ்ய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் இதுகுறித்து கூறுகையில், ‘உக்ரைனிலிருந்து தானியங்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதை ரஷ்யா தடுப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுக்கிறோம்.
உண்மையில், எங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம்தான் உக்ரைன் தானிய ஏற்றுமதிக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது’ என கூறினார்.
தற்போதைய போர் காரணமாக, உக்ரைனில் உற்பத்தியாகியுள்ள 2 கோடி டன் தானியங்களை அந்த நாட்டு விவசாயிகளால் சர்வதேசச் சந்தைக்குக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், முன்னணி தானிய ஏற்றுமதியாளரான உக்ரைனிலிருந்து கொள்முதல் செய்ய முடியாததால், பல நாடுகள் உணவுப் பற்றாக்குறை அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.