உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் மத்தியில், உக்ரைனிய எல்லையில் தங்களது படைகளை நிலைநிறுத்துவதாக பெலாரஷ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ அறிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று (வியாழக்கிழமை) நடந்த காணொளி சந்திப்பின் போது, அவர் இந்த உத்தரவினை பிறப்பித்தார்.
நேரம் பறந்துவிட்டதாகவும், இந்த செயற்பாட்டுக் கட்டளையை நிறுவ வேண்டியதன் அவசியத்தை அவர்கள் தீவிரமாக உணர்ந்துள்ளதாகவும் கூறினார்.
மேற்கு மற்றும் வடமேற்கு கட்டளைகளுடன், இது தெற்கு கிளையாக இருக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இப்போது தெற்கு செயற்பாட்டுக் கட்டளை அமைக்கப்படவில்லை, குடியரசு தெற்கு எல்லைகளை உடனடியாகவும் தற்போதுள்ள செயல்முறையின் ஒரு பகுதியாகவும் பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் படைப்பிரிவு தந்திரோபாயப் பிரிவுகள் சுழற்சி முறையிலான உத்தரவின் பேரில் உள்ளதாகவும், தமது உத்தரவுக்கமைய தெற்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும், எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் ராணுவம் அடைக்கலம் அளித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இன்னும் போர் நடக்கவில்லை என்ற போதிலும், இந்த போர் சூழ்நிலைகளில் துருப்புக்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.