மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரத்தை, மக்களால் புறக்கணிக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க வகிப்பது மக்களாணைக்கு முற்றிலும் விரோதமானது என மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
9ஆவது நாடாளுமன்றத்தின் பதவி காலத்தை வரையறை செய்து பொதுத் தேர்தலை விரைவாக நடத்தி மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதமரிடம் அதிகாரங்களை ஒப்படைக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதேவேளை 21ஆவது திருத்தம் தொடர்பான எமது யோசனையை நீதியமைச்சிடமும், நாடாளுமன்ற ஆலோசனை குழுவிடமும் முன்வைப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அரசியல் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தயாரில்லை என்றும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.