அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சியின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பு இல்லாமல் ஆக்கப்படுவது மற்றும் ஜனாதிபதி அதிகாரங்களில் ஒரு பகுதியை பிரதமருக்கு பகிர்வது தொடர்பிலேயே இவ்வாறு முரண்பாடு உருவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும், ஏற்பாட்டை பஸில் ராஜபக்ஷவிற்கு மிகவும் நெருக்கமானவர்கள் எதிர்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி அமைச்சு பதவிகளை வகிக்க முடியாது என்ற ஏற்பாட்டை ஜனாதிபதிக்கு சார்பான மொட்டு கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பதாகவும் கூறப்படுகின்றது.
இதனால் வாக்கெடுப்பின்போது பிளவு வெளிப்படையாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, 21வது திருத்த சட்டத்தினை இறுதிப்படுத்தும் முக்கிய கூட்டமொன்று எதிர்வரும் 03ஆம் திகதி இடம்பெறவுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.