ஜம்மு – காஷ்மீரில் இருந்து திறமையான தடகள வீராங்கனை ஸ்ரேயா குப்தா, விஷால் தாப்பர், ஜாவேத் அகமது சவுத்ரி மற்றும் மயங்க் ஷர்மா ஆகிய நான்கு பேர், எதிர்வரும் சேபர் உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக போட்டியிட தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்முவின் ஃபென்சிங் ஸ்டேட் சென்டர் ஒஃப் எக்ஸலன்ஸ் பட்டதாரிகளான நால்வர் அணி, மார்ச் மாதம் அமிர்தசரஸில் நடந்த மூத்த தேசிய சாம்பியன்ஷிப்பில் செயற்றிறன் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஆவர்.
‘நாங்கள் ஜம்மு-காஷ்மீரில் வாள்வீச்சு போட்டிகளில் பங்கேற்றுள்ளோம். எமக்கு பயனளிக்கும் அதிநவீன உபகரணங்கள், பயிற்சியாளர்கள், உடற்பராமரிப்பாளர்கள் ஆகியவற்றுடன் சிறப்பான மையமும் வழங்கப்பட்டுள்ளது’ என்று ஜம்மு-காஷ்மீர் விளையாட்டு சபையின் செயலாளர் நுசாத் குல் தெரிவித்தார்.
‘திறமையான எமது இளைஞர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், மேலும் எங்கள் விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் மேடையை எட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை’ என்று விளையாட்டு சபையின் முதன்மை செயலாளர் ஒய்எஸ்எஸ் அலோக் குமார் கூறினார்.
இதேவேளை, பிரேசிலின் காக்சியாஸ் டூ சுல் நகரில் நடைபெறவுள்ள காதுகேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் 65 பேர் கொண்ட குழுவில் இந்தியா எட்டு ஜூடோக்களைக் கொண்டிருக்கும்.
எட்டு பேரில் மூன்று பேர் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் ராகேஷ் சிங் (60 கிலோவுக்கு கீழ்), விஷால் கஜூரியா (66 கிலோவுக்கு கீழ்) ), மற்றும் ரக்ஷிந்தா மெஹக் (78 கிலோவுக்குக் கீழே)ஆகியோரே அக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் ஆவர்.