பண்டாரகம, அட்டலுகமவில் பாத்திமா ஆயிஷா என்ற சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவைத் தவிர மேலும் ஐந்து பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் ஏற்கனவே குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அயலவர்கள் உட்பட 30 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாத்திமா ஆயிஷா என்ற சிறுமியின் கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணை நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கமைய ஏற்கனவே குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் இயங்கும் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று, அட்டலுகம சிறுமி வாழ்ந்த பகுதிக்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அத்துடன், அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்றைய தினம்(30) இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமி கடந்த 27ஆம் திகதி தனது வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்கு கோழிக்கறி வாங்கச் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது காணாமல் போயிருந்தார்.
இந்தநிலையில் நேற்று முந்தினம் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது என்பதுக் குறிப்பிடத்தக்கது.