உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதனை நிறுத்த வேண்டும் என பிரான்ஸ், ஜேர்மனிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் 3 மாதங்களை கடந்து நீடித்து வருகிறது.
இந்த போருக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ரஷ்ய படைகளின் தாக்குதல்களை சமாளிக்க உக்ரைனுக்கு ஆயுதங்களை அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் வழங்கி உதவி வருகின்றன.
இதனால் ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் வீரர்கள் கடும் சவால் அளித்தனர்.
உக்ரைன் தலைநகர் கிவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷ்யாவினால் கைப்பற்ற முடியவில்லை.
தற்போது கிழக்கு உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதனை நிறுத்த வேண்டும் என பிரான்ஸ், ஜேர்மனிக்கு ரஷ்ய ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.